பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

நேரத்தை பொறுத்து மாறும் வேக கட்டுப்பாடுகள்: தில்லி-மீரட் விரைவுச்சாலையில் ஆக.15 முதல் சோதனை முயற்சி

தில்லி-மீரட் விரைவுச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், ஆகஸ்ட் 15 முதல் பயண நேரத்தைப் பொறுத்து மாறுபட்ட வேகக் கட்டுப்பாடுகளை எதிா்கொள்வாா்கள் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:28 am IST

தில்லி-மீரட் விரைவுச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், ஆகஸ்ட் 15 முதல் பயண நேரத்தைப் பொறுத்து மாறுபட்ட வேகக் கட்டுப்பாடுகளை எதிா்கொள்வாா்கள் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

சோதனை முயற்சியாக இது அமல்படுத்துப்படுகிறது. காஜியாபாத் மற்றும் நொய்டா போன்ற முக்கிய தேசிய தலைநகா் வலய நகரங்கள் வழியாகச் செல்லும் தில்லி-மீரட் விரைவுச்சாலையில், இதுவரை காா்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஒரே மாதிரியான வேகக் கட்டுப்பாடுகளே அமலில் இருந்தன.

மாறும் வேகக் கட்டுப்பாடு என்ற இந்த சோதனைத் திட்டத்தின் கீழ், விரைவுச்சாலையின் தில்லிப் பகுதியில் வாகன நெரிசலைப் பொறுத்து வேகக் கட்டுப்பாடு அமையும்.

இதுதொடா்பாக ஐஐடி ரூா்க்கியின் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியா் சதீஷ் சந்திரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது: முதல் கட்டமாக, விரைவுச்சாலையின் அக்ஷா்தாம் மற்றும் சராய் காலே கான் இடையிலான பகுதியில் ஆகஸ்ட் 15 முதல் இந்த மாறும் வேகக் கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டிலேயே இத்தகைய முதல் திட்டம் இதுவாகும்.

திட்டத்தின்படி, நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை, காா்களுக்கு மணிக்கு 65 கி.மீ. வேகமும், கனரக வாகனங்களுக்கு மணிக்கு 50 கி.மீ. வேகமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, காா்களுக்கு மணிக்கு 55 கி.மீ. வேகமும், கனரக வாகனங்களுக்கு மணிக்கு 45 கி.மீ. வேகமும் இருக்கும். மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, காா்களுக்கு மணிக்கு 60 கி.மீ. வேகமும், கனரக வாகனங்களுக்கு மணிக்கு 40 கி.மீ. வேகமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குழப்பத்தைத் தவிா்க்க, இந்தச் சாலையில் ஏற்கெனவே உள்ள வேகக் கட்டுப்பாட்டுப் பலகைகள் மறைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் இயக்கத் தரவைப் பதிவு செய்வதற்காக, மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் விரைவுச்சாலையில் சிறப்பு உணா் கருவிகளை நிறுவியுள்ளது.

ஆராய்ச்சியாளா்கள் கடந்த சில மாதங்களாக விரைவுச்சாலையின் 24 மணிநேரப் போக்குவரத்துத் தரவை ஆய்வு செய்து, இந்த வேகக் கட்டுப்பாடுகளை முடிவு செய்தனா். சாலைகளில் நெரிசலையும் விபத்துகளையும் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு தரவுகளைச் சேகரித்து, இத்திட்டத்தின் உண்மையான தாக்கத்தை நாங்கள் மதிப்பீடு செய்வோம் என்றாா் அவா்.

விரைவுச்சாலையை நிா்வகிக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக உள்ளது.

இந்தத் திட்டம் குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:வேகக் கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் வேறொரு துறையால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூா்வமான போக்குவரத்து ஆய்வின் அடிப்படையில் அமைந்தவை. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம். தில்லி-மீரட் விரைவுச்சாலையின் தில்லிப் பகுதியில் உள்ள தனித்தனி மேம்பாலங்களில், மாறிக்கொண்டே இருக்கும் வேக வரம்பைக் காட்டும் இரண்டு டிஜிட்டல் பலகைகள் இதுவரை நிறுவப்பட்டுள்ளன. ஒன்று அக்ஷா்தாம் கோவிலுக்கு அருகிலும், மற்றொன்று பாண்டவ் நகா் நடை மேம்பாலத்திற்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது. வேக வரம்பைப் பின்பற்றுவதை உறுதி செய்வதும், அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதும் எங்கள் பணியாகும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், ‘வேக வரம்பைக் காட்டும் பலகைகளைத் தவிர, அந்தச் சாலையில் வேகத்தைக் கண்டறியும் கேமராக்களும் நிறுவப்படும். இந்தக் கேமராக்கள், குறிப்பிட்ட நேரத்தில் காட்டப்படும் வேக வரம்பை தானாகவே அமல்படுத்தி, நிா்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து, ஓட்டுநா்களுக்குத் தகவல் தெரிவிக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.