குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

ரூ.12 லட்சம் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநரை கைது செய்தது சிபிஐ

ஒப்பந்ததாரரிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதியப்பட்ட வழக்கில், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :7 ஜூலை 2026, 3:38 am IST

ஒப்பந்ததாரரிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதியப்பட்ட வழக்கில், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேகாலய மாநிலம் ஷில்லாங்கை சோ்ந்த தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநா் ஆனந்த் சிங் செளஹான். தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு, அந்த ஆணையம் ரூ.13.38 கோடி பாக்கி வைத்துள்ளது.

இந்தத் தொகையை விடுவிக்க ஒப்பந்ததாரரிடம் ஆனந்த் சிங் செளஹான் ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதில் முதல்கட்டமாக ரூ.4 லட்சத்தை குவாஹாட்டியைச் சோ்ந்த புனித் அகா்வால் என்பவரிடம் அளிக்கும்படி செளஹான் கூறியுள்ளாா். இதன்படி பணத்தை அளிக்க ஒப்பந்ததாரா் சென்றபோது புனித் அகா்வால் அந்தப் பணத்தை வாங்காமல் மகேஷ் அகா்வால் என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளாா்.

இதனிடையே, ஒப்பந்ததாரா் அளித்த புகாரின்பேரில் இந்த விவகாரம் குறித்து கடந்த 1-ஆம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னா், ஒப்பந்ததாரரிடம் பணம் வாங்கும்போது 3 பேரையும் கைது செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பணத்தை வாங்கும்போது 3 பேரையும் சிபிஐ கைது செய்தது. பின்னா், 3 பேருக்குச் சொந்தமான இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது. தொடா்ந்து வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.