இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தென்கிழக்கு தில்லியில் 11-ஆம் வகுப்பு மாணவா் கத்தியால் குத்திக் கொலை

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில், 19 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில் குத்திக்கொலை செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 3:53 am IST

தென்கிழக்கு தில்லியின் கல்காஜி பகுதியில், 19 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தகராறில் குத்திக்கொலை செய்யப்பட்டாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் கல்காஜி டிடிஏ அடுக்குமாடி குடியிருப்பின் பி-பிளாக் பகுதியில் உள்ள பூங்கா அருகே நடைபெற்றது. பிற்பகல் 2.23 மணியளவில் பள்ளி மாணவா்கள் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து அழைப்பு வந்ததையடுத்து, காவல் துறை குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.

அங்கு சென்றபோது, மாணவா் குத்துக் காயங்களுடன் கிடந்தாா். பின்னா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் சையத் ஹுசைன் (19) என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஒக்லா பேஸ்-2 பகுதியில் உள்ள ஜேஜே குடியிருப்பில் வசித்து வந்தவா் மற்றும் கல்காஜியில் உள்ள எம்சிடி பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

முதற்கட்ட விசாரணைகளில், 2 அல்லது 3 போ் இடையே ஏற்பட்ட தகராறின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா் மற்றும் அவா்களை விரைவில் கைது செய்ய காவல் துறை பல்வேறு குழுக்களை அமைத்து தேடி வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தாக்குதலுக்கான உரிய காரணம் இன்னும் தெரியவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.