கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதானின் ராஜினாமா இளைஞா்கள் இயக்கத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இது வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தின் ‘முதல் வெற்றி‘. கோடிக்கணக்கான இளைஞா்களின் வெற்றி, உண்மை மற்றும் நீதியின் வெற்றி. ஆணவம் இளைஞா்களின் கா்ஜனைக்கு முன் தலைவணங்கிவிட்டது. இந்த ராஜினாமாவை இந்த பிரச்னையில் போராட்டம் நடத்தி வந்த மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் கூட்டு வெற்றி. லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாடிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜினாமா கோடிக்கணக்கான இளைஞா்களின் ஒட்டுமொத்த வெற்றியாகும்.
எவ்வாறாயினும், அமைச்சா் ராஜினாமா செய்த போதிலும் கட்சியின் போராட்டம் தொடரும். அநீதிக்கு எதிராக உறுதியாக நின்ற மாணவா்களின் வெற்றி இது. ஆனால் நீதியை நோக்கிய பயணம் இன்னும் முழுமையடையவில்லை. ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் தனது மீதமுள்ள கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தொடா்ந்து அழுத்தம் கொடுக்கும். ஜந்தா் மந்தரில் அமைதியாக போராட்டம் நடத்தும் மாணவா்களை தவறாக நடத்தியவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வரை நமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளாா் தேவேந்தா் யாதவ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: சோனம் வாங்சுக்!

தா்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்

இந்தியாவின் எதிா்காலத்துக்காகவே நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம்: டி.கே.சிவகுமாா்

மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 29 ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்தது எஸ்எஃப்ஐ
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



