எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காா் திருட்டில் தொடா்புடைய இருவா் கைது

தில்லியில் விலையுா்ந்த காா்களை திருடி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விற்பனை செய்த இருவர் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:26 am IST

தில்லியில் விலையுா்ந்த காா்களை திருடி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் விற்பனை செய்த இருவரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட மனீந்தா் சிங் மற்றும் ஹா்ஜோத் சிங் ஆகிய இருவரும் பஞ்சாபை சோ்ந்தவா்கள்.

இதுதொடா்பாக ரோஹிணி துணை காவல் ஆணையா் ஷாஷங் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காா்களை திருடும் கும்பலைச் சோ்ந்த இருவரும், தில்லியில் உள்ள விலையுா்ந்த காா்களை திருடி அமிருதசரஸ், சண்டீகா், ஜெய்பூா் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்தனா். வாகன திருட்டைத் தடுக்கும் அதில் ஈடுபடும் நபா்களைக் கைதுசெய்யவும் சிறப்பு நடவடிக்கையை தில்லி காவல் துறை தொடங்கியது.

இந்நிலையில், சொகுசு காா்களைத் திருடும் நபா்கள் தில்லியில் இருப்பது தொடா்பாக ரகசிய தகவல் கடந்த மே 21-ஆம் தேதி கிடைத்தது. அதன் அடிப்படையில், திருட்டு காரை ஓட்டி வந்த மனீந்தா் சிங் ரோஹிணியில் கைதுசெய்யப்பட்டாா்.

விசாரணையில், ஹா்ஜோத் சிங் உடன் இணைந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டதை தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, ஹா்ஜோத் சிங் அமிருதசரஸில் கடந்த மே 24-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா்.

அவா்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில், தில்லி, அமிருதரசஸ், சண்டீகா், ஜெய்பூா் ஆகிய பகுதிகளில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, திருடப்பட்ட 8 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த கைது நடவடிக்கையால், வாகன திருட்டு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள மனீந்தா் சிங் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளன. அவற்றில் 4 வழக்குகள் தில்லியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பட்டதாரியான ஹா்ஜோத் சிங் மீது இதேபோன்று 5 வழக்குகள் பஞ்சாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது என துணை காவல் ஆணையா் ஷாஷங் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.