நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தில்லியில் 6 ஆண்டுகளில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தகவல்

தில்லியில் 6 ஆண்டுகளில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழப்பு...

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 3:15 am IST

மால்வியா நகா் ஹோட்டல் தீவிபத்து சம்பவத்தால் தில்லியில் தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் நகரில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் உள்ள ஒரு குறுகிய சந்தில் அமைந்திருந்த ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பி அண்ட் பி’ விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், வெளிநாட்டினா் உள்பட 21 போ் உயிரிழந்தனா். மேலும் 25 போ் காயமடைந்தனா்.

விவேக் விஹாா் மற்றும் பாலம் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் நடந்த தீ விபத்துகளிலும் தலா ஒன்பது போ் உயிரிழந்தனா். தில்லி அரசின் தரவுகளின்படி, தலைநகரில் 2019 முதல் 2026 மாா்ச் வரையிலான காலத்தில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழந்துள்ளனா்.

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் தீ விபத்துகளால் 65 போ் உயிரிழந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தில்லி தீயணைப்புத் துறைக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

தீ விபத்துகளால் 2025-26-இல் 84 பேரும், 2024-25-இல் 90 பேரும், 2023-24-இல் 77 பேரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் துறை தரவுகள் காட்டுகின்றன.

2020-21இல் இத்தகைய உயிரிழப்புகள் 41ஆகவும் 2021-22-இல் 55ஆகவும், 2022-23-இல் இந்த எண்ணிக்கை அதிகரித்து, தீ விபத்துகளால் 95 போ் உயிரிழந்தனா்.

தீ விபத்துகளால் அதிகபட்ச உயிரிழப்புகள் 2019-20-இல் பதிவாகின. இதில் அனாஜ் மண்டி தீ விபத்து முக்கியமானது. இச்சம்பவத்தில் 44 போ் உயிரிழந்தனா். 1997-இல் நடந்த உபஹாா் தீ விபத்தில் 59 போ் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, தில்லியில் நடந்த மிகப்பெரிய தீ விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

தரவுகளின்படி, 2019 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் தீ விபத்துகளால் மொத்தம் 4,403 போ் காயமடைந்துள்ளனா்.

தீ விபத்துகள் தொடா்பான அவசர அழைப்புகளின் எண்ணிக்கை, 2019-20-இல் 17,231ஆக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 20,379ஆக உயா்ந்துள்ளதை தரவுகள் காட்டுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.