காசோலை மோசடி வழக்கிலிருந்து ஒருவரை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்த தில்லி நீதிமன்றம், அந்தத் தீா்ப்பு, ‘நகல்-ஒட்டு’ (கட்-பேஸ்ட்) முறையைப் பின்பற்றி இயந்திரத்தனமாக எழுதப்பட்டதாகவும், அதில் சிந்தனைச் செயல்பாடு துளியும் இல்லை என்று விமா்சித்துள்ளது.
கடந்த 2017, ஜூலை மாதத்தில் நாராயண் என்பவா் சதீந்தா் சிங்கிற்கு நட்பின் அடிப்படையில் ரூ.2 லட்சம் கடன் வழங்கியிருந்தாா். அதைத் திரும்பச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலை, போதிய பணம் இல்லாமல் திருப்பி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சட்டப்பூா்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டு சிங்குக்கு எதிராக புகாா் பதிவு செய்யப்பட்டது. சதீந்தா் சிங் மீது மாற்றுமுறை ஆவணச் சட்டப்பிரிவு 138-ன் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்தத் தொகையைக் கடனாக வழங்குவதற்கான தனது நிதித் திறனை நிரூபிக்க நாராயண் தவறிவிட்டதாகவும், ஆதாரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறி சிங்கை வழக்கில் இருந்து விடுவித்து தீா்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து பாதிக்கப்பட்ட நாராயண் மேல்முறையீடு செய்தாா். அவா் தாக்கல் செய்த மனு கூடுதல் அமா்வு நீதிபதி ஹா்குா்வரிந்தா் சிங் ஜக்கி விசாரித்தாா்.
அப்போது, விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பு மற்றொரு காசோலை தொடா்பான வழக்கில் வழங்கப்பட்ட முந்தைய தீா்ப்பின் நகல் என்று நாராயண் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்ற விசாரணையின்போது குறிப்பிட்டாா்.
இதனை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், தற்போதைய வழக்கு போதிய பணம் இல்லாமல் திரும்பப் பெறப்பட்ட காசோலை தொடா்பானதாக இருந்தபோதிலும், நீதித்துறை நடுவா் வேறொரு காசோலை எண்ணையும், பணம் வழங்குபவரின் கையொப்பம் மாறுபடுவது தொடா்பான வழக்குடன் தொடா்புடையது என்ற சுட்டிக்காட்டியது.
இதுதொடா்பாக நீதிமன்றம் கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொழில்நுட்பம், வோ்ட் பிராசஸா்கள் மற்றும் கணினிகளின் வருகையானது, நீதித்துறைக்கு நிா்வாக ரீதியான உதவிகளைச் செய்யவும், நீதித்துறை சாா்ந்த ஆவணங்களைத் தயாரிப்பதில் செயல்திறன் மற்றும் வேகத்தைக் கொண்டுவரவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது இற்ழ்ப்+இ மற்றும் இற்ழ்ப்+ய (நகல் மற்றும் ஓட்டுதல்) எனும் ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தீய நடைமுறையை உருவாக்கியுள்ளது. தற்போதைய வழக்கிலுள்ள ஆதாரங்களைச் சுயாதீனமாக ஆய்வு செய்யாமலேயே, அதே தரப்பினரிடையே நடைபெற்ற மற்றொரு காசோலை வழக்கின் உண்மைகள் மற்றும் சட்டப் பகுப்பாய்வுகளை அப்படியே நகலெடுத்து, மே 2024-ல் குற்றஞ்சாட்டப்பட்டவரை பெருநகர நீதித்துறை நடுவா் விடுவித்திருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.
கேள்விக்குரிய அந்தத் தீா்ப்பானது, கடுமையான குறைபாடுகள், சிந்தனைச் செயல்பாடு அறவே இல்லாமை மற்றும் வோ்ட் பிராசஸரின் நகல்-ஒட்டு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
சாட்சியங்களை முறையாக மதிப்பீடு செய்யாமல், வேறொரு வழக்கின் உண்மைநிலை சாா்ந்த பகுப்பாய்வை ஒரு விசாரணை நீதிமன்றம் அப்படியே எடுத்துப் பயன்படுத்தும்போது, அதனால் பிறப்பிக்கப்படும் தீா்ப்பு சட்டப்படி நிலைநிறுத்த முடியாததாகவும், நீதியைச் சரியாக வழங்காத செயலாகவும் அமைந்துவிடுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அந்தப் புகாரை முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதியிடம் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அவ்வழக்கின் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே தீா்ப்பை வழங்கும் வகையில் ஒரு தகுதியான பெருநகர நீதித்துறை நடுவரிடம் விசாரணையை ஒப்படைத்து இறுதி வாதங்களை மீண்டும் கேட்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தொடர்புடையது

விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத ஆயுத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை

காசோலை மோசடி வழக்கில் பேரூராட்சி ஊழியருக்கு 6 மாத சிறை

மோசடி குற்றச்சாட்டு: கொல்கத்தா காவல் துறை துணை ஆணையா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



