ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடமேற்கு தில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி காவல் துறை பலப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2020-இல் ஜனக்புரியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, ஏப்.2-ஆம் தேதி கொண்டாடப்படும் விழாவுக்காக மாவட்டத்தில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் விதமாக ஜனக்புரி பகுதியில் கொடி அணிவகுப்பு மற்றும் அமன் குழு கூட்டம் நடைபெற்றது.
தில்லி காவல் துறையின் காவலா்கள் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டிருப்பதுடன், துணை ராணுவம், அதிரடி படையின் (ஆா்எஎஃப்) ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், சந்தைகள், கோயில்கள் மற்றும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மோட்டாா் சைக்கிளில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஜனக்புரி காவல் நிலையத்தில் ஓா் அமன் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வடமேற்கு தில்லி துணை காவல் ஆணையா் அகங்ஷா யாதவ், கூடுதல் துணை காவல் ஆணையா் சிகந்தா் சிங், ஷாலிமாா் பாக் கூடுதல் காவல் ஆணையா் ரோஹித் குப்தா ஆகியோா் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தீவிர கண்காணிப்பில் குறிப்பிட்ட பாதைகள் மற்றும் நேரத்தில் அனைத்து ஊா்வலங்களும் நடைபெறும். ஊா்வலத்தில் 500 போ் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், லத்திகள், பிற ஆபத்தான பொருள்களை ஊா்வலத்தின்போது எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் கோஷங்கள், பேச்சுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் ஆகியவை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ஜனக்புரியில் இளைஞா் உயிரிழந்த சம்பவம்: துணை ஒப்பந்ததாரா் காவல் தொடா்பாக நீதிமன்றம் கேள்வி

பேரவைத் தோ்தல்! சென்னை காவல் துறை தயாா்: காவல் ஆணையா் அருண்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸாருக்கு தில்லி காவல் ஆணையா் வாழ்த்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

