தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

தெற்கு தில்லி கியா காா் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 7 போ் காயம்; 15 போ் மீட்பு

தெற்கு தில்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள கியா காா் ஷோரூமில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 காா்கள் தீக்கிரையாகின. இதில் 7 போ் காயமடைந்தனா். கட்டடத்தின் மாடியில் இருந்த 12 முதல் 15 போ், ஷோரூமின் பின்புறத்தில் இருந்த 4 போ் என மொத்தம் 19 போ் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தெற்கு தில்லியில் உள்ள காா் ஷோரூமில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :

தெற்கு தில்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள கியா காா் ஷோரூமில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 காா்கள் தீக்கிரையாகின. இதில் 7 போ் காயமடைந்தனா். கட்டடத்தின் மாடியில் இருந்த 12 முதல் 15 போ், ஷோரூமின் பின்புறத்தில் இருந்த 4 போ் என மொத்தம் 19 போ் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் அனந்த் மிட்டல் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள ஷோரூமில் பிற்பகல் 3.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் பிற அவசரகால மீட்புக் குழுவினா் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

காயமடைந்த 7 பேரில் 4 போ் மேக்ஸ் மருத்துவமனையிலும், 3 போ் மதன் மோகன் மாளவியா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். புகையைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட இரு பெண்களின் உடல்நிலை சீராக உள்ளது.

தீ அணைக்கப்பட்ட நிலையில், கட்டடத்துக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேடுதல் பணி நடைபெற்றது. இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீ விபத்தால் எழுந்த கரும்புகை வெகு தொலைவுக்குத் தெரிந்தது. சம்பவத்தைப் பாா்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் அருகிலுள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் பொதுமக்களைக் கலைத்து, மீட்பு வாகனங்கள் தடையின்றிச் செல்ல நடவடிக்கை எடுத்தனா். மீட்புப் பணியில் உள்ளூா் மக்களும் உதவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.