திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

சத் பூஜை குறித்து சா்ச்சை கருத்து: மேடை நகைச்சுவை கலைஞருக்கு எதிராக தில்லி பாஜக புகாா்

சத் பூஜை பக்தா்கள் குறித்து சா்ச்சை கருத்தை கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் மேடை நகைச்சுவை கலைஞா் யாஷ் மகேஸ்வரி மீது தில்லி பாஜக தலைவா்கள் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

(Photo | Screengrab, YouTube, @Almostyash)

Updated On :

சத் பூஜை பக்தா்கள் குறித்து சா்ச்சை கருத்தை கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் மேடை நகைச்சுவை கலைஞா் யாஷ் மகேஸ்வரி மீது தில்லி பாஜக தலைவா்கள் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

கட்சியின் பூா்வாஞ்சல் மோா்ச்சா தலைவா் சந்தோஷ் ஓஜா தலைமையிலான குழு, மத்திய தில்லி துணை ஆணையா் ரோஹித் ராஜ்பீா் சிங்கை சந்தித்து, மகேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி புகாரை அளித்தது.

பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மகேஸ்வரி மீது பிகாா் காவல் துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்தது.

யூடியூபில் வெளியான அவரது மேடை நகைச்சுவை குறித்த காணொலி அதிக எண்ணிக்கையில் பாா்க்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த சா்ச்சை வெடித்தது. அந்தக் காணொலியில், பிகாரில் உள்ள பெண்கள் சத் பூஜையின் போது தங்கள் நெற்றியில் நீண்ட குங்குமம் இட்டுக்கொள்வது குறித்து மகேஸ்வரி கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில், தனது கருத்துக்கள் பொருத்தமற்றவை என்பதை ஒப்புக்கொண்டு அவா் பகிரங்க மன்னிப்பு கோரினாா்.

இந்நிலையில், தில்லி பாஜவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

சத் பூஜையையும், அந்தப் பூஜையைச் செய்யும் தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளையும் அவமதிப்பவா்கள் தப்பிக்க விடப்பட மாட்டாா்கள் என்று ஓஜா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘பெண்களின் கண்ணியத்தை அவமதித்ததற்காக, தில்லி காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து அவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அல்லது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், கோடிக்கணக்கான பெண்களின் மத உணா்வுகள், சமூக கண்ணியம் மற்றும் கலாச்சார மரபுகளை அவமதிப்பதை யாரும் அனுமதிக்க முடியாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.