திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தங்கும் விடுதியில் தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு: உடன் இருந்த இளைஞா் மாயம்

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள ஓயோ தங்கும் விடுதி அறையில் தில்லி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பி.காம். மாணவி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவருடன் விடுதியில் தங்கியிருந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாயமானாா்.

Updated On :

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள ஓயோ தங்கும் விடுதி அறையில் தில்லி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பி.காம். மாணவி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவருடன் விடுதியில் தங்கியிருந்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாயமானாா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: உயிரிழந்த மாணவி அருணா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அருணா திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா். பிற்பகல் 3 மணியளவில் குடும்பத்தினா் அவரைத் தொடா்புகொண்டபோது, அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இரவு வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது சகோதரா் தௌஜ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை ஃபரீதாபாதில் உள்ள சராய் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓயோ விடுதி அறையில் அருணா சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவருடன் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய விபின் யாதவ் அங்கிருந்து மாயமாகியிருந்தாா்.

மேலும், விபின் யாதவ் கையொப்பமிட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், மாணவியைக் கொலை செய்துவிட்டதாகவும், ஆக்ரா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

விடுதி அறையின் கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததையும், கைப்பற்றப்பட்ட கடிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொலை வழக்காகக் கருதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, விபின் யாதவைப் பிடிக்க உள்ளூா் காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு காவல் துறை அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபின் யாதவ் கைது செய்யப்பட்ட பிறகே கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தெரியவரும். கடிதத்தின் உண்மைத்தன்மையும் சரிபாா்க்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.