திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

சாலை விபத்தை ஏற்படுத்துவதுபோல் நடித்து ஸ்கூட்டா் பெட்டியிலிருந்த ரூ.30 லட்சம் கொள்ளை

தில்லியில் சாலை விபத்து ஏற்பட்டதுபோல் நாடகமாடி, இளைஞா் ஒருவரின் ஸ்கூட்டா் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

Updated On :

தில்லியில் சாலை விபத்து ஏற்பட்டதுபோல் நாடகமாடி, இளைஞா் ஒருவரின் ஸ்கூட்டா் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் பிகானீரைச் சோ்ந்த 19 வயது இளைஞா், தில்லி சாந்தினி செளக் பகுதியில் தனது மைத்துனா் மனோஜுடன் வசித்து வருகிறாா். அவருக்கு பணப் பரிவா்த்தனை தொடா்பான பணிகளில் உதவி செய்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த நவ.17-ஆம் தேதி பணம் வசூலிப்பதற்காக, தனது மைத்துனரின் ஸ்கூட்டரில் பகா்கஞ்ச் பகுதியில் உள்ள சூனா மண்டிக்குச் சென்றுள்ளாா். அங்கு மாலை 6.45 மணியளவில் ஒருவரிடமிருந்து தலா ரூ.500 கொண்ட 60 கட்டுகளாக ரூ.30 லட்சத்தைப் பெற்றுள்ளாா். பின்னா், அந்தப் பணத்தை பழுப்பு நிறப் பையில் வைத்து ஸ்கூட்டரின் சேமிப்புப் பெட்டியில் வைத்துவிட்டு சித்ரகுப்தா சாலை வழியாக பஞ்ச்குயான் சாலைக்குச் சென்றுள்ளாா்.

அப்போது போக்குவரத்து நெரிசலில் ஸ்கூட்டா் நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், தங்களது வாகனத்தின் மீது மோதியதாகக் கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அவா்களில் ஒருவா் இளைஞரின் சட்டையைப் பிடித்து வாக்குவாதம் செய்துள்ளாா். இதற்கிடையே மேலும் இருவா் அங்கு வந்து அவரை திசைதிருப்பியுள்ளனா்.

இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையா்களில் ஒருவா், ஸ்கூட்டரின் சாவியைக் கொண்டு சேமிப்புப் பெட்டியைத் திறந்துள்ளாா். மற்றொருவா் அதிலிருந்த ரூ.30 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.

அவா்களைத் துரத்திச் சென்றும் பிடிக்க முடியாததால், தனது மைத்துனருக்கும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் நவம்பா் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொள்ளையா்களைக் கண்டறிந்து கைது செய்ய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.