விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனவன்குடியிருப்பில் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

அனவன்குடியிருப்பில் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

News image

~

Updated On :13 ஜூன் 2024, 10:38 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் அனவன்குடியிருப்பில் நடமாடும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்ததுடன், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச் சரகம் கோரையாறு பீட் வெளிமண்டலப் பகுதிக்குள்பட்ட இக்கிராமத்துக்குள் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவதும், வளா்ப்பு விலங்குகளைத் தூக்கிச் செல்வதும் தொடா்கிறது.

இதனிடையே, அனவன்குடியிருப்பில் கடந்த மே மாதம் வைக்கப்பட்ட கூண்டில் 2 சிறுத்தைகள் சிக்கின. எனினும், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடா்வதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனா். அதன்பேரிலும், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவுப்படியும் வனச் சரகா் சத்யவேல் தலைமையில் பாபநாசம் வனச்சரகப் பணியாளா்கள், சிறப்பு அதிவிரைவுப் படையினா் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சிறுத்தையின் நடமாட்டம் கண்டறியப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதுடன், கூண்டு வைத்துள்ளனா். ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.