போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுச்செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் 90 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களின் நலனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். 2016 ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயா்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியா்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, உடனடியாக அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com