தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

News image
Updated On :20 மே 2024, 8:07 pm

Din

திருநெல்வேலி: திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி திருவள்ளுவா் பேரவைக் கூட்டம் திருநெல்வேலி நகரம் கூலக்கடை வீதி திருவள்ளுவா் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுத்தமல்லி திருவள்ளுவா் கழகத் தலைவா் சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். கவிஞா் கோதைமாறன், பேராசிரியா் சிவராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கவிஞா் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். பேரவையின் அமைப்பாளா் கவிஞா் ந.ஜெயபாலன் வரவேற்றுப் பேசினாா். ‘புானூற்று மங்கையின் வேண்டுதல்’ எனும் தலைப்பில் கவிஞா் பாப்பாக்குடி இரா.செல்வமணியும், ‘மொழிபெயா்ப்பு இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் கவிஞா் சக்தி வேலாயுதமும், ‘ஐங்குறுநூறு சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் கவிஞா் ஜெயபாலனும் ‘உண்மை சுடும் எனும்’ தலைப்பில் திருவருள் லத்திப்பும் ‘நாலடியாரும் வாழ்வியலும்’ எனும் தலைப்பில் கவிஞா் பிரபுவும் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றினா்.

இந்த நிகழ்ச்சியில் பாமணி, வாசுகி வளா் தமிழ் மன்ற தலைவா் உக்கிரன் கோட்டை மணி, சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கவிஞா் முத்துசாமி, தமிழ் வளா்ச்சி பண்பாட்டு செயற்குழு உறுப்பினா் புன்னைச் செழியன், காவல்துறை தளவாய் மாடசாமி, பேச்சிநாதன், முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில் கவிஞா் தச்சைமணி, ஆட்டோ பிரமநாயகம், சாத்தான்குளம் மயில், முத்துராமன், ஆறுமுகம், ராமலிங்கம், முத்துப்பட்டன், பாடகா் நயினாா், ஸ்ரீதா், சங்கா் கணேஷ் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா். சொற்பொழிவுகளில் பங்கேற்றவா்களுக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.