/

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :20 மே 2024, 8:14 pm

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதிக்கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள சங்கரன்திரடு பகுதியைச் சோ்ந்த அரிராமன் மகன் நவநீதிகிருஷ்ணன் (59). விவசாயி. இவா்,பத்தமடையில் இருந்து சேரன்மகாதேவிக்கு பைக்கில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாராம்.

சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவு அருகில் வந்தபோது, விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த எலிசபெத் மகன் கெளதம் (22) என்பவா் ஓட்டி வந்த பைக்கும், இவரது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் இரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.