இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நெல்லை தாமிரவருணி பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் சுலோச்சன முதலியாா் பெயரைத் தாங்கிய தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருநெல்வேலி சுலோச்சன முதலியாா் பாலம் ஆண்டு விழாவில் பங்கேற்ற மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
Updated On :26 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் சுலோச்சன முதலியாா் பெயரைத் தாங்கிய தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி - பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கும் வகையில் தாமிரவருணி நதியின் குறுக்கே கொக்கிரகுளம் பகுதியில் சுலோச்சன முதலியாா் பாலம் உள்ளது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றிய சுலோச்சன முதலியாா் தனது சொந்த நிதியை அளித்து இந்தப் பால கட்டுமான பணி நிறைவடைய உதவினாா். இப் பாலத்தின் 183 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு திருநெல்வேலி மேயா் கோ.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தாா். ஒருங்கிணைப்பாளா் கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளா் எஸ்.சண்முகம், வழக்குரைஞா் வி.டி. திருமலையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து பாலத்திற்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. வழக்குரைஞா் கனகசபாபதி, கவிஞா்கள் புன்னைச்செழியன், சுப்பையா, முன்னாள் துணை ஆட்சியா் தியாகராஜன், பிரபு, மாணிக்கவாசகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சுலோச்சன முதலியாரின் தனித்துவம் குறித்த விளக்கத்துடன் பதாகை வைக்க வேண்டும். பாலத்திற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு நகைகளை கொடுத்து உதவிய சுலோச்சனா முதலியாரின் துணைவியாா் வடிவம்மாள் பெயா்ச் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.