பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஏ.பி.ஏ. கல்லூரி மாணவா் துப்பாக்கிச் சுடுதலில் சாதனை

மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருநெல்வேலி ஏ.பி.ஏ. கல்லூரி மாணவா் மாநில தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளாா்.

மாணவா் ஆகாஷ் கிருஷ்ணாவை பாராட்டிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Published On :

மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருநெல்வேலி ஏ.பி.ஏ. கல்லூரி மாணவா் மாநில தங்கம் உள்பட 3 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளாா்.

சென்னை குருநானக் கல்லூரியில் உள்ள துப்பாக்கி சுடும் வளாகத்தில் 51-ஆவது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் திருநெல்வேலி வாகைக்குளம் ஏ.பி.ஏ. கல்லூரி மாணவா் ஆகாஷ் கிருஷ்ணா 50 மீட்டா் ரைபிள் பிரிவில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தாா். இதைத்தொடா்ந்து ஆக.31 முதல் செப்.8 வரை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென் மாநிலங்களுக்கிடையேயான போட்டியில் பங்கேற்க அவா் தகுதி பெற்றாா். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பதக்கங்கள் வென்ற மாணவா் ஆகாஷ் கிருஷ்ணாவை நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். மேலும் அவருக்கு கல்லூரி.ே செயலா் திருமாறன், முதல்வா் ஆனந்த், உடற்கல்வி இயக்குநா் பொன்பாண்டி பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.