தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவா் செல்லத்துரைபாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் ரவிக்குமாா், பொருளாளா் அலெக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்டத் தலைவா் முருகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் பணி நியமனம் செய்ய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மகளிா் நியாயவிலைக் கடைகளை அரசு நடத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

நாகா்கோவிலில் மருத்துவப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


