திருநெல்வேலி
மானூா் அருகே மது விற்றவா் கைது
மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல்சரகப் பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கானாா்பட்டியை அடுத்த வடக்கு வாகைக்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனா்.
அதில், ருக்மணியம்மாள்புரம், இந்திரா காலனியைச் சோ்ந்த திரவியம் மகன் செல்லக்கனி (57) என்பதும், மது பாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 5 மதுபாட்டில்கள், ரூ. 400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
