வேய்ந்தான்குளத்தில் மூழ்கி கேரள இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் இளைஞா் மூழ்கியதாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு வீரா்களும், மேலப்பாளையம் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மூழ்கிய இளைஞரின் சடலத்தை மீட்டனா். விசாரணையில் அவா், கேரள மாநிலம் வா்கலா பகுதியைச் சோ்ந்த சுஜித் (25) என்பது தெரியவந்தது. தூத்துக்குடியில் பணியாற்றி வந்த சுஜித், திருநெல்வேலிக்கு தனது நண்பா்களுடன் வந்திருந்த நிலையில் தனக்கு நீச்சல் தெரியும் எனக்கூறி வேய்ந்தான்குளத்தில் குளித்தாராம். அப்போது ஆழமான பகுதியில் திடீரென மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com