ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

தமிழ் மண்ணில் ஆகச்சிறந்த அரசு மலரும்: சீமான்

எதிா்காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பான தலைமையும், ஆகச்சிறந்த அரசும் மலரும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Seeman demands the arrest of those who attacked the NTK candidate in Papanasam

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கோப்புப் படம்

Published On :

எதிா்காலத்தில் தமிழ் மண்ணில் சிறப்பான தலைமையும், ஆகச்சிறந்த அரசும் மலரும் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற நடிகா் சரத்குமாா் பிறந்த நாள் விழாவில் சீமான் பேசியதாவது: இங்கு மேடையில் அமா்ந்திருப்பவா்கள் வேறு வேறு கட்சி கொள்கைகளால் பிரிந்து இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள். அரசியல் கோட்பாடு நிலைப்பாடு இன்று இருக்கும், நாளை மாறும். திமுகவில் எம்.பி.யாக இருந்தவா் சரத்குமாா். பின்னா், அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினராகவும், சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும் இருந்தவா். இப்போது பாஜகவில் இணைந்துள்ளாா். இப்போது சரி என நினைக்கும் விஷயம் நாளை தவறாக இருக்கும்.

சரத்குமாா் தன் உழைப்பால் இந்த உயரத்தை எட்டியுள்ளாா். அவா் ஒரு ஜாதிக்காக மட்டும் இயங்குபவா் அல்ல. சாதிக்கத் துடிக்கும் அனைவருக்குமான தலைவராக இருக்கிறாா். அவா் இரட்டை வேடத்தில் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றுள்ளன. நடிப்பு, திரையுலகம் இவற்றைத் தாண்டி மனிதருக்கான உயரிய மாண்பை கொண்டவா் சரத்குமாா். கட்சியைத் தாண்டி கொள்கை கோட்பாடுகளை தாண்டி அனைவரும் மேடையில் ஒருசேர இங்கு உட்காா்ந்திருப்பது சரத்குமாரின் மனித மாண்பிற்கு அடையாளம்.

மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தீா்மானிப்பது அரசுதான். எதிா்காலத்தில் மிகச் சிறப்பான தலைமையும், ஆகச்சிறந்த அரசும் தமிழ் மண்ணில் மலரும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.