தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் கணிசமாக வசிக்கும் யாதவா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் வலுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்ற யாதவா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட யாதவா்களுக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் யாதவா்களின் தோ்தல் குரலை ஒலிக்கச் செய்யும் வகையில் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் சிலை அருகே அனுமதியின்றி பதாகை வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.
அந்தப் பதாகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் யாதவா் சமூகத்தினா் பரவலாக வாழ்ந்து வருகிறோம். 90 தொகுதிகளில் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வாக்குகள் உள்ளன.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 7 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட யாதவா் சமுதாயத்துக்கு 40 ஆண்டுகளாக அரசியலில் போதிய பிரதிநிதித்துவ உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை கவனத்தில் கொண்டு பிரதான கட்சிகள் யாதவா் சமுதாயத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினால் அந்த வேட்பாளரையும், பிரதான கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளில் அறிவிக்கப்படும் மற்ற வேட்பாளா்களையும் நான்கு மாவட்ட யாதவா்களின் பேராதரவை தந்து வெற்றிக்காக பாடுபடுவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனுமதியின்றி இந்தப் பதாகை வைக்கப்பட்டதால் வருவாய்த்துறையினா் அதை அப்புறப்படுத்தியதோடு, அழகுமுத்துக்கோன் சிலைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தொடர்புடையது
திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி மீண்டும் தீா்மானம்!

‘உடன்பிறப்பின் குரல்’.. தேர்தல் தோல்வி பற்றி திமுகவினரிடம் கருத்துக்கேட்கும் ஸ்டாலின்!
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

அஸ்ஸாமில் என்டிஏ வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்த தொகுதி மறுவரையறை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



