பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

காந்தி ஜெயந்தி: சிறப்பு கதா் தள்ளுபடி விற்பனை தொடக்கம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு தள்ளுபடி விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிழ்ச்சியில், ஆட்சியா் ஆனந்த் மோகன் கலந்து கொண்டு, காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, தீபாவளி சிறப்பு கதா் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீபாவளி சிறப்பு கதா் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் கதா் சிறப்பு விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதா் விற்பனை நிலையங்கள் செயல்படும்.

2026-2027-ஆம் ஆண்டுக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கு கதா் விற்பனை குறியீடாக ரூ.30 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்குறியீட்டை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களின் வாழ்வாதாரம் மேம்பட கதா் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநா் நல்லதம்பி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ம. கயிலைச்செல்வம், தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரிய அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.