தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதிக்குழுக் கூட்ட முடிவின்படி, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 01.04.2015 முதல் இந்த உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சிலவகை மானியங்கள் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. எனவே தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் பயனடையலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு நாகர்கோவில் கோட்டாரிலுள்ள முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
திருமண மானியம் 10,000-த்தில் இருந்து 20,000 ஆகவும், 2ஆம் உலகப்போரில் பணியாற்றி ஓய்வூதியமின்றி வெளிவந்த முன்னாள் படைவீரர்களுக்கான ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி 3,000-த்தில் இருந்து 4,000 ஆகவும், 2ஆம் உலகப்போரில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்களின் விதவையர்களுக்கான ஆயுள்கால மாதாந்திர நிதியுதவி 2,000-த்தில் இருந்து 2,500 ஆகவும், தொழுநோய், புற்றுநோய், பக்கவாதநோய், கண் பார்வையற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு மானியம் மற்றும் மருத்துவ மாதாந்திர நிதியுதவிகள் 1,000-த்தில் இருந்து 1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று அவர்களது மனைவிக்கும் மூக்கு கண்ணாடி மானியம் வழங்கப்படும். தொழுநோய், புற்றுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு ஆயுட்கால பராமரிப்பு மானியம் மாதம் ரூ. 1,500 வீதம் வழங்கப்படும்.
மனவளர்ச்சி குன்றிய முன்னாள் படைவீரர்களின் மனைவி மற்றும் விதவையர்களுக்கு ஆயுள்கால பராமரிப்பு மானியம் மாதம் ரூ. 1,500 வீதம் வழங்கப்படும். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.
குறிப்பிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளி என கருதப்படுகிற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோருக்கு பராமரிப்பு நிதியுதவி மாதம் ரூ.1500 வீதம் வழங்கப்படும்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை இரண்டாம் மதிப்பெண் பெறும் சிறார்களுக்கும் வழங்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் படத்தின் பாடல் வெளியீடு!

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தி அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம்: மேலும் 6 பேர் கைது!
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


