அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மணலோடை பழங்குடியினர் பள்ளியில் குழந்தைகள் தின விழா

மணலோடை அரசு பழங்குடியினர் உண்டுறைவிட நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:37 am

DIN

மணலோடை அரசு பழங்குடியினர் உண்டுறைவிட நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
முற்றிலும் மாணவ, மாணவியர்களே நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாணவி பிரபிணா தலைமை வகித்தார். மாணவி ஸ்ரீஜா வரவேற்றார். நாகர்கோவில் சுரக்ஷா பழங்குடியினர் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சுஜி ஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். மாணவி ஸ்ரீரஞ்சினி நன்றி கூறினார். மாணவி நிஷா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


மார்த்தாண்டம் அருகே...
மார்த்தாண்டம் அருகே தொடுகுளம் நேரு நினைவு விளையாட்டு திடல் அமைப்பு சார்பில், குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு,  அமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.  பள்ளித் தலைமையாசிரியர் சவுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.  அமைப்பின் செயலர் ஜோஸ்பின் டேனியல்,  பொருளாளர் வினோகுமார்,  ஐஎன்டியூசி அமைப்பின் நிர்வாகி ஜோஸ்,  ஜாண் தினேஷ்,  மனோ,  தாஸ்,  ரெஜின் மற்றும் பெற்றோர்,  ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிரபுரம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,  பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்குறிச்சி பள்ளியில்...
நேருவின் பிறந்த நாளையொட்டி  கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் கனகராஜ் தேசியக் கொடியை  ஏற்றிவைத்தார்.  இதைத் தொடர்ந்து  நேருவின்  பெருமைகள் குறித்து  மாணவர்,  மாணவிகளிடையே  பேச்சுப்போட்டி  நடைபெற்றது.  மாலையில்  பள்ளித் தாளாளர்  ஜாண்போஸ்கோ அடிகளார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மாணவி அனிஷா வரவேற்றார். ஆ சிரியை ரோஸ்லின் விஜயா வாழ்த்திப் பேசினார்.  பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அருள்சகோதரி மார்டின்  பரிசுகள் வழங்கினார்.  மாணவர், மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

திருவட்டாறு நடனப் பள்ளியில்...
திருவட்டாறு சாத்வீக சமாஜம் இசை நாட்டிய அகாதெமியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கடையல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹர்சகுமார் தலைமை வகித்தார். சாத்வீக சமாஜம் இசை நாட்டியப் பள்ளி இயக்குநர் ஜான் அலெக்சாண்டர் சிறப்புரை நிகழ்த்தினார். மாணவியர் விபிஷா, ஆதிரா, அபிஸ்ரீ ஆகியோர் குழந்தைகள் தினத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினர். அர்ச்சனா  கவிதை வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவியர்களின் நடனங்கள் இடம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.