நாகர்கோவிலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில்  சனிக்கிழமை(அக்.14)  நடைபெறுகிறது.
Updated on
1 min read

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில்  சனிக்கிழமை(அக்.14)  நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குமரி மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராம நலன் மற்றும் தூய்மைக்கான பணி நடைபெற்று வருகிறது. இதில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கும் வகையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் அக். 14 ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் உள்ளூர்  மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனத்தினர் பங்கேற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளனர். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, பார்மசி, நர்சிங், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 40 வயதிற்குள்பட்ட இருபாலரும் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com