கோடை விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.


கோடை விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்நிலை சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் அதிகளவில் செல்கின்றனர். இம்மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் வெப்பம் குறையவில்லை.
திற்பரப்பு அருவியில் தற்போது குறைந்தளவே தண்ணீர் கொட்டினாலும் குளிப்பதற்கு இதமாகவே உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...