மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோடை விடுமுறை: திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:47 am

DIN

கோடை விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். 
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி,  பத்மநாபபுரம் அரண்மனை,  மாத்தூர் தொட்டிப்பாலம்,  திற்பரப்பு அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். 
தற்போது வெயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்நிலை சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் அதிகளவில் செல்கின்றனர். இம்மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் வெப்பம் குறையவில்லை. 
திற்பரப்பு அருவியில் தற்போது  குறைந்தளவே தண்ணீர் கொட்டினாலும் குளிப்பதற்கு இதமாகவே உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.