மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொல்காப்பியர் பிறந்த நாள் விழா: சிலைக்கு தமிழறிஞர்கள் மரியாதை

தொல்காப்பியரின் 2729ஆவது பிறந்த நாளையொட்டி மார்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:48 am

DIN

தொல்காப்பியரின் 2729ஆவது பிறந்த நாளையொட்டி மார்த்தாண்டம் அருகே காப்பிக்காட்டில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர். இவர் கன்னியாகுமரி மாவட்டம், காப்பிக்காட்டில் பிறந்ததாக தமிழறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் இப்பகுதியில் தொல்காப்பியருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. 
இந்நிலையில் தொல்காப்பியர் பிறந்ததாக கருதப்படும் சித்திரை மாதம் முழுமதி நாளான ஞாயிற்றுக்கிழமை காப்பிக்காட்டில் உள்ள அவரது சிலைக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அமைப்புச் செயலர் புலவர் த. சுந்தரராசன் தலைமை வகித்தார். குமரி முத்தமிழ் மன்றச் செயலர் செ. சஜீவ் வரவேற்றார். இதில் எழுத்தாளர் பொன்னீலன்,  குமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வாளரும், ஆய்வுக் களஞ்சியம் நூல் ஆசிரியருமான எஸ். பத்மநாபன், அதங்கோட்டாசான் அறக்கட்டளை தலைவர் புலவர் கோ. கோவிந்தநாதன்,  குமரி மாவட்ட பெற்றோர் -ஆசிரியர் சங்கத் தலைவர் பி.பி.கே. சிந்துகுமார், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை துணை ஆணையர் மு. பாஸ்கரன், காவடியூர் சிவ. நாராயணபெருமாள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, சென்னை தொல் தமிழர் வரலாற்று அதிநுட்ப ஆய்வுமையத்தின் வே.தி. செல்லம்,  குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் பா. லாசர் ஆகியோருக்கு தொல்காப்பியர் விருதை எழுத்தாளர் பொன்னீலன் வழங்கினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.