‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நித்திரவிளை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, நித்திரவிளை அருகே 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, நித்திரவிளை அருகே தற்காலிக முகாமில் தங்கியுள்ளவர்களை கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மங்காடு, பணமுகம் மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிக்கு உள்பட்ட வைக்கல்லூர், ஏலூர்முக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள 300 -க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கலிங்கராஜபுரம் சுனாமி மறுவாழ்வு மையக் கட்டடத்திலும், பார்த்திபபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி, பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை கிள்ளியூர் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமார் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பார்த்திபபுரம் உள்ளிட்ட முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு பாய் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
அப்போது, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் கிறிஸ்டோபர், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் விமல், ஏழுதேசம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மேரிபாய், கட்சியின் மாவட்டச் செயலர் டென்னிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.