17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நாகர்கோவில் நீதிமன்ற கட்டடத்தை ஆய்வு செய்த பாதுகாப்புக் குழு

நாகர்கோவில் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தை பாதுகாப்புக்குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 7:14 am IST

நாகர்கோவில் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தை பாதுகாப்புக்குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது, 1899 ஆம் ஆண்டு முதல் நாகர்கோவிலில் நீதிமன்றங்கள் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்தன. இக் கட்டடத்துக்கு பின்புறத்தில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு அங்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. எனினும், பழைய கட்டடத்தில் மகளிர் நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. 
இதனிடையே, பழமையான நீதிமன்றக் கட்டடங்களைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து பழைய கட்டடங்களை
பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குரைஞர் அருணன் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பழங்கால மற்றும் பாரம்பரிய நீதிமன்றக் கட்டடப் பாதுகாப்புக்குழுவை அமைத்தது. 
 இக்குழுவினர் தமிழகம் முழுவதும் பழமையான நீதிமன்றக் கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திங்கள்கிழமை நாகர்கோவிலில் நீதிமன்ற பழைய கட்டடத்தை பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, இக்குழுவின் சிறப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவிபொறியாளர் சண்முகராஜா,  பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் கணேசன்,  நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஜோஸ்பெனடிக்ட்,  செயலர் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
நீதிமன்ற பழைய கட்டடத்தின் ஆய்வறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் புதுப்பிக்க மதிப்பீடு தயார் செய்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அக்குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.