நாகர்கோவிலில் வேன் ஓட்டுநரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இருளப்புரத்தைச் சேர்ந்தவர் ரெகு (24 ) , வேன் ஓட்டுநரான இவர் குளச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷாவை (24) காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடனான தகராறில் அபிஷா தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். ரெகு தன் தாய் எழிலரசியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரெகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இருளப்பபுரம் பகுதியில் சாலையோரத்தில் ரெகு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதுகுறித்து நாகர்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், கோட்டாறு காவல் நிலைய ஆய்வாளர் அன்புபிரகாஷ், உதவி ஆய்வாளர் அருளப்பன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து, ரெகுவை கொலை செய்தவர்கள் யார் என்பதுகுறித்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









