தோவாளையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தோவாளையில் நடைபெற்றது.

Published On :

தேசிய ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா தோவாளையில் நடைபெற்றது.
இந்திய அரசு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கள விழிப்புணர்வு அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
 தோவாளை ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீரலட்சுமி முன்னிலை வகித்தார். கள விளம்பர உதவி அலுவலர் திரு.போஸ்வெல் ஆசீர் வரவேற்றார்.
மாவட்ட ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள் சிறப்புரையாற்றினார். சமுதாய நல செவிலியர் கெளசல்யா தேவி,  தாய்- சேய் நலத் திட்டங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டங்கள் குறித்து விளக்கினார். வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முத்துராமலிங்கம், மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகள் குறித்து பேசினார். சமூக நல விரிவாக்க அலுவலர் விமலா சமூக நல துறை திட்டங்களை விளக்கினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் நாகேந்திரப்பிள்ளை, கிராமிய சுயதொழில் பயிற்சி நிறுவன பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆகியோர் அந்தந்த துறை திட்டங்களை எடுத்துக்கூறினர்.
நிகழ்ச்சியில் பகுதி சுகாதார செவிலியர் சொர்ணம், மகளிர் திட்டம் நாகபிரியா, தூய்மை இந்தியா இயக்கம் வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆறுமுகம், அறிஞர் அண்ணா கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் வைஜோ லதா ஆகியோர் கலந்துகொண்டனர்.  ஊராட்சி செயலர் லட்சுமி  நன்றி கூறினார். 
இந்நிகழ்ச்சியையொட்டி,  அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.   சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன், கொடி அசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தார்.  பேரணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அரசு விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.