தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

தேசிய கராத்தே போட்டி: கேரள மாநில அணி முதலிடம்

கன்னியாகுமரி பால்குளத்தில் நடைபெற்ற தேசிய 4 ஆவது கராத்தே போட்டியில் கேரள மாநில அணி முதலிடம் பெற்றது.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:32 am IST

கன்னியாகுமரி பால்குளத்தில் நடைபெற்ற தேசிய 4 ஆவது கராத்தே போட்டியில் கேரள மாநில அணி முதலிடம் பெற்றது.
சிட்டோ ரியு கராத்தே பள்ளி சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.  இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு ரோகிணி பொறியியல் கல்லூரி முதல்வர் டி.ஆர். ராஜேஷ் தலைமை வகித்தார். 
போட்டியினை, மாவட்ட ரோட்டரி விருது கமிட்டித் தலைவர் எம். சலீம், கல்லூரியின் தலைவர் கே.நீலமார்த்தாண்டன், கல்லூரி நிர்வாக இயக்குநர்கள் என்.நீலவிஷ்ணு, வி.எம்.பெல்ஸிஜியோ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகர்கோவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சி.சிதம்பரம்பிள்ளை, ஏ.வி.ஆன்ட்ரூ, எச்.சரவணசுப்பையா, ஆசிய கராத்தே போட்டி நடுவர் டி.இ.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் என்.செந்தில் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் கேரள மாநில அணி முதலிடமும், தமிழக அணி 2 ஆவது இடமும், கர்நாடக அணி 3 ஆவது இடமும் பெற்றன. 
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ரோட்டரி உதவி ஆளுநர் எம்.நேசமணி தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திர மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ். ஆபிரகாம்லிங்கம், அகஸ்தீசுவரம் ஞானதீபம் பள்ளி முதல்வர் ஜே.ஐடா ஜான்சி,  குமரி மாவட்ட குத்துசண்டை சங்க துணைத் தலைவர் ஐ.கார்த்திகேயன், எஸ்.எம்.சிவகுமார், எஸ்.பிரதீஸ்குமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். ஆசிய கராத்தே போட்டி நடுவர் கே.கே.எச்.ராஜ் போட்டியினை ஒருங்கிணைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.