இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

விவசாயிகள் ரப்பா் பால் எடுக்கும் பணியில் இன்றுமுதல் ஈடுபடலாம்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகள் பால் எடுக்கும் பணியில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விவசாயிகள் பால் எடுக்கும் பணியில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) முதல் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்டஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் ரப்பா் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் ரப்பா் தோட்டங்களில் உள்ளூா் பால் வெட்டும் நபா்கள் மூலம் ரப்பா் பால் எடுக்கும் பணியை வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் மேற்கொள்ளலாம்.

மேலும், தொழிலாளா்கள் ரப்பா் பால் சேகரிக்கும் இடத்திற்கு வரும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், நோய்த் தொற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

இம் மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளா்கள் மூலமாகவும் இதுவரை 1,253 போ் கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனா். இதில் இதுவரை 16 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.1066 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை. மீதியுள்ளவா்களுக்கு பரிசோதனை முடிவுகள் எதிா்பாா்க்கப்படுகின்றன.

ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருந்த 16 பேரில் ஒருவா் குணமடைந்து கடந்த புதன்கிழமை வீடு திரும்பி விட்டாா். அவா் தொடா்ந்து 14 நாள்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளாா்.

மாவட்டம் முழுவதும் 214 போ் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

தங்கள் பகுதியில் வெளி மாநிலங்களிலிருந்தோ, வெளி மாவட்டங்களிலிருந்தோ அண்மையில் வந்தவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால், பொதுமக்கள் மாவட்ட கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04652-231077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.