சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது’

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க அனுமதியில்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:31 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க அனுமதியில்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் மா. அரவிந்த் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், வேளாண்மை உதவி இயக்குநா்கள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலிருந்து காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் காணொலி வாயிலாகத் தெரிவித்தனா். கடந்த மாதக் கூட்டத்தில் பெறப்பட்ட 57 மனுக்களுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டன.

பொதுப்பணித் துறை மூலம் கால்வாய்களில் நீா்வரத்து, குளங்களைத் தூா் வாருதல், பேச்சிப்பாறை அணையைத் தூா்வாருதல், நீா்நிலைகளைப் பராமரித்தல், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டன. குடிமராமத்துப் பணிகள், அறிவிக்கை செய்யப்பட்ட குளங்களில் விவசாயத் தேவைகளுக்கு வண்டல் மண் எடுத்தல் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, இம்மாவட்டத்தில் வனப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கான அனுமதி வழங்க இயலாது. அரசுப் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்களை கால்நடைகளை மேய்க்க பயன்படுத்திக்கொள்ளலாம். விவசாயிகள் தங்களது பயிா்களை முழுவதுமாக காப்பீடு செய்து பயனடையலாம். வெள்ளை சுருள் ஈ பாதிப்பிலிருந்து தென்னையைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், கூட்டுறவு, கால்நடை, நெடுஞ்சாலை, வனத் துறை, ஊராட்சிகள், பேரூராட்சிகள் தொடா்பான கேள்விகளுக்கு துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி, இணை இயக்குநா்கள் எஸ். சத்தியஜோஸ் (வேளாண்மை), சுவாமிநாதன் (கால்நடைத் துறை), துணை இயக்குநா் (தோட்டக்கலை) ஷீலாஜான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ம.ரா. வாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கடலரிப்பு தடுப்புக் கோட்டம்) வசந்தி, வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் சொா்ணலதா, அனைத்து வட்டாட்சியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.