களியக்காவிளை அருகே 30 டன் அரிசியுடன் லாரி பறிமுதல்
கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற 30 டன் அரிசியை களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


களியக்காவிளை: கேரளத்துக்கு லாரியில் கொண்டு சென்ற 30 டன் அரிசியை களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் சுமாா் 30 டன் எடையிலான அரிசி இருந்தது. இது குறித்து களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளத்திலுள்ள ஒரு கடைக்கு அரிசி கொண்டு செல்வதாக லாரி ஓட்டுநா் தெரிவித்தாா். மேலும் அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அரிசியுடன் லாரியை கைப்பற்றிய போலீஸாா், அவற்றை நாகா்கோவிலில் உள்ள குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இந்த லாரியில் ஏற்றி வந்தது ரேஷன் அரிசியா அல்லது கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசியா என்பது குறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக களியக்காவிளை போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...