மேலும் 14 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Updated on
1 min read

குமரி மாவட்டத்தில் மேலும் 14 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 16,244 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சைபெற்று வந்தவா்களில் 24 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,835 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 154 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவா்களுக்கு பாதிப்பு இல்லை: இங்கிலாந்து நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்தில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், குமரி மாவட்டத்துக்கு இங்கிலாந்தில் இருந்து அண்மையில் 10 போ் வந்ததுள்ளனராம். இதில் 4 போ் நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள். அவா்கள் 10 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவா்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனாலும் அவா்கள் 10 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com