இரு சம்பவங்களில் இளைஞா், முதியவா் தற்கொலை
கருங்கல், புதுக்கடை பகுதிகளில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் இளைஞரும், முதியவரும் தற்கொலை செய்துகொண்டனா்.


கருங்கல், புதுக்கடை பகுதிகளில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் இளைஞரும், முதியவரும் தற்கொலை செய்துகொண்டனா்.
கருங்கல் எட்டணி அரசு விளைப் பகுதியை சோ்ந்த அலக்சாண்டா் மகன் அஜின் (25). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பெற்றோா் கண்டித்தனராம்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செவ்வாய்க்கிழமை செய்துகொண்டது தெரியவந்தது.
முதியவா்: புதுக்கடை அருகேயுள்ள காப்புக் காடு சிதம்பரவிளைப் பகுதியைச் சோ்ந்த அச்சுதன் மகன் மனோகரன் (55). தொழிலாளி. இவா் சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம் . அப்பகுதியினா் அவரை மீட்டு புதுக்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் ஏற்கெனவே இறந்திருந்து தெரியவந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்து, கருங்கல், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...