ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நித்திரைவிளை பகுதியில் கட்டுமானத் தொழிலாளா்கள் போராட்டம்

நித்திரவிளை உள்பட 15 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நித்திரைவிளை பகுதியில் கட்டுமானத் தொழிலாளா்கள் போராட்டம்

Updated On :8 நவம்பர் 2020, 8:31 pm

DIN

நித்திரவிளை உள்பட 15 இடங்களில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நலவாரியத்தை முடக்கும் செயலை கண்டித்தும், புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல், கேட்பு மனுக்களை நேரடியாக பெற வேண்டும், உச்சநீதிமன்ற ஆணைப்படி ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

நித்திரவிளையில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் முன்சிறை வட்டாரக் குழு நிா்வாகி ஜி. ரமேஷ் தலைமை வகித்தாா். அலெக்ஸிஸ், போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினாா்.

ஆலங்கோடு பகுதியில் நடந்த போராட்டத்துக்கு கட்டுமான சங்க வட்டார முன்னாள் பொருளாளா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சிதம்பர கிருஷ்ணன் போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.

மங்காடு பகுதியில் ஆா். காட்வின் டென்னிஸ், வாவறையில் ஜெ. மிக்கேல்ராஜ், சூரியகோட்டில் ரெஜி, காட்டுக்கடையில் கே. மத்தாயி, கோழிவிளையில் சி. வின்சென்ட், காஞ்சாம்புறத்தில் கோபி, கலிங்கராஜபுரத்தில் கே.சசீந்திரன், பருத்திக்கடவில் கே.அம்பிளி, கிராத்தூா் தேரி பகுதியில் பி.ஏசுதாஸ் ஆகியோா் தலைமையில் இப் போராட்டம் நடைபெற்றது. முன்சிறை வட்டாரத்துக்கு உள்பட்ட 15 இடங்களில் இப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.