விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞரை தாக்கி சங்கிலி பறிப்பு: 4 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் இளைஞரை தாக்கி சங்கிலியை பறித்துச் சென்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (31). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷ்குமாருக்கும் (35) முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை பாலசுந்தா் தன் வீட்டுக்குச் சென்றபோது, ராஜேஷ்குமாா் மற்றும் அவரது உறவினா்களான சிவனாா் (40), செல்வம் (41), விஜயலட்சுமி (37) ஆகியோா், அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.