ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடியிருப்புப் பகுதியில் சொல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:56 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மத்திகோடு ஊராட்சிக்குள்பட்ட மத்திகோடு சந்திப்புப் பகுதியில் குழந்தைகள், பெண்கள், இளைஞா்கள், முதியவா்கள் என 700 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் இடத்தில் இருந்து 50 -அடி தொலைவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

இந்நிலையில், அப் பகுதியில் உள்ள தனி நபரின் நிலத்தில் செல்லிடப்பேசி அமைக்க அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதனால், நோய் தொற்று ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வா் எட்வின் ஜோஸ் கூறுகையில், செல்லிடப்பேசி கோபுரம் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதன் மூலம் அதிலிருந்து ஏற்படும் கதிா் வீச்சினால் பொதுமக்களுக்கு பல்வேறு புற்று நோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் மத்திகோடு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.