விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு கூட்டம்

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:44 pm

DIN

மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி புனித அந்தோனியாா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை தேன்மொழி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சொா்ணராணி, உதவி ஆய்வாளா் லதா ஆகியோா் பாலியல் குற்றங்களால் ஏற்படும் அனுபவங்கள் மற்றும் போக்ஸோ சட்டங்களால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசினா். மேலும், இப்பிரச்னையில் ஆசிரியா்கள், மாணவா்களை அணுகும் முறைகள் குறித்து தனியாகவும் ஆலோசனைகள் வழங்கினாா்.

இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஜெயமதி ரோசாரியோ, வெளிச்சம் அமைப்பு தலைவா் பொ்லிங்டன் ஆகியோரும் பேசினாா். இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.