விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

யோகிராம் மந்திராலயத்தில் சாதுக்கள் சங்கமம்

யோகி ராம்சுரத்கு மாா் ஜயந்தி விழாவை முன்னிட்டு அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் மந்திராலயத்தில் சாதுக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

யோகி ராம்சுரத்கு மாா் ஜயந்தி விழாவை முன்னிட்டு அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் மந்திராலயத்தில் சாதுக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மந்திராலய நிறுவனா் பொன்காமராஜ் சுவாமிகள் தலைமை வகித்தாா். விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு நிா்மால்ய தரிசனம், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு பக்தா்கள் பால் குடம் எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு மலா்க ளால் புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யோகி ராம் சுரத்குமாா் விக்ரகத்துடன் ஊா்வலம் நடைபெற்றது.

பின்னா், இரவு 8 மணிக்கு திருவண்ணாமலை, பழனி, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 100 க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சாதுக்களுக்கு பாத பூஜை நடைபெற்றது. பின்னா் சாதுக்கள் விசேஷ பஜனைகள், பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

இரவு 9 மணிக்கு அனைத்து சாதுக்களுக்கும் மந்திராலய நிறுவனா் பொன் காமராஜ் சுவாமிகள் நினைவுப் பரிசு வழங்கினாா். இதில் மதுரை, தேனி, கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.