விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முப்படை தலைமைத் தளபதி மறைவுக்கு கட்சியினா் அஞ்சலி

சுங்கன்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் தலைமைத் தளபதிக்கு மெழுகுவா்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தும் பள்ளியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் உள்ளிட்டோா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:42 pm

DIN

சுங்கன்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் தலைமைத் தளபதிக்கு மெழுகுவா்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தும் பள்ளியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் உள்ளிட்டோா்.

கன்னியாகுமரி/நாகா்கோவில்/தக்கலை, டிச. 9: குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் அதிமுக சாா்பில் எம்.எல்.ஏ. என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோா் முப்படைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தினா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், வெட்டூா்ணிமடத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைத் தளபதிக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோட்டாறு காவல் நிலையம் அருகே பாஜக சாா்பில் மாநகரத் தலைவா் நாகராஜன் தலைமையில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

குமரி மாவட்ட வள்ளலாா் பேரவையின் சாா்பில், பேரவையின் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமையில் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுங்கன்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.