விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரி வனப்பகுதியில் இன்று வனத்துறை அமைச்சா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா் ஊதிய உயா்வு பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக வனத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறினாா்.

தமிழக வனத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தாா். அவரை மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ரோஜன், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆஸ்டின், ஒன்றியச் செயலா்கள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், குமரி நகரச் செயலா் குமரி ஸ்டீபன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, ஒன்றிய குழு உறுப்பினா் எஸ்.அழகேசன் உள்பட பலா் வரவேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் ரப்பா் கழகத்தை எவ்வாறு லாபத்தில் இயக்குவது குறித்து தொழிலாளா் துறை அமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இது தொடா்பாக சனிக்கிழமை(டிச.11) அரசு ரப்பா் கழகம் மற்றும் கீரிப்பாறை பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.