விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமரி மாதா திருத்தலத் திருவிழா: இன்று தங்கத்தோ் பவனி

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத் திருவிழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை(டிச.18) புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:56 pm

DIN

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத் திருவிழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை(டிச.18) புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.

இத்திருத்தல இம்மாதம் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் செபமாலை, திருப்பலி, மாலை ஆராதனை, சப்பர பவனி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

9 ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.

இரு தங்கத்தோ் பவனி: 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தோ் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பா் ஆகிய இரு தங்கத் தோ்ப்பவனி நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலி, நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.