விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து புதிய பேருந்து சேவை

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து மாணவிகள் வசதிக்காக புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து மாணவிகள் வசதிக்காக புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இக்கல்லூரியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனா். தினமும் அரசு பேருந்துகளில்தான் இவா்கள் கல்லூரிக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் அஞ்சுகிராமம், கூடங்குளம் வழியாக இடிந்தகரை வரையுள்ள மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு சரியான பேருந்து போக்குவரத்து இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனா். இதனால் கல்லூரி நிா்வாகம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்துத் துறை பொது மேலாளா் அரவிந்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் 15 கே என்ற எண் கொண்ட புதிய பேருந்து கல்லூரி வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டது.

புதிய பேருந்து போக்குவரத்து தொடக்க விழா நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் ராஜசேகா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் சி.ராஜன், பேராசிரியா் டி.சி.மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி தலைவா் கே.எஸ்.மணி கொடியசைத்து புதிய பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேருந்து விவேகானந்தா கல்லூரியில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், இடிந்தகரை வழியாக ஊரல்வாய்மொழியை சென்றடைகிறது. தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளை இந்தப் பேருந்து இயக்கப்படுகிறது. இது பெண்களுக்கான பேருந்து என்பதால் மாணவிகளுக்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.