ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா: நாளை கொடியேற்றம்

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:27 pm

DIN

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற கோயிலான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு

இத்திருவிழா புதன்கிழமை (பிப்.17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு மேல் நந்தியெம்பெருமான் கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவில் சுவாமி, அம்பாள் பவனி ஆகியவை நடைபெறும்.

பிப்.19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு மக்கள்மாா் சந்திப்பு, பிப்.25-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.45 மணிக்கு தேரோட்டம், இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், 10 மணிக்கு சப்தாவா்ணம் நிகழ்ச்சி, பிப்.26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆறாட்டு துறைக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் விதியுலா ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.